2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

மனம் திறந்த ராஷி

J.A. George   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நயன்தாராவுடன் “இமைக்கா நொடிகள்” திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, “அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார்” ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மையில், ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன்” என்று கூறினார்.

அத்துடன், “எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும்.  ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், “தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை பிடிக்கும்.  அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடனம் ஆட விருப்பம் உள்ளது.

கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும்  பிடித்தவர்கள். இப்போது தெலுங்கை விட அதிக தமிழ் திரைப்படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .