S.Renuka / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மராட்டிய மன்னர் சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை குறித்து சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன.
'சாவா' (Chhava) திரைப்படத்தின் இசை குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மிக முதிர்ச்சியான மற்றும் அழுத்தமான பதிலடி கொடுத்துள்ளார்.
ஒரு வரலாற்றுப் படத்திற்கு இசை அமைக்கும் போது, அந்த காலகட்டத்தின் ஆன்மாவை சிதைக்காமல், அதே சமயம் இன்றைய தலைமுறைக்கும் புரியும் வகையில் இசையமைக்க வேண்டும். நான் எப்போதும் பரிசோதனைகளை (Experiments) விரும்புபவன்.
இந்தப் படத்தின் இசை என்பது வெறும் பாடல்கள் மட்டுமல்ல, அது சம்பாஜி மகாராஜின் வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் ஒரு கருவி. அதை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ளேன்.
விமர்சனங்கள் எப்போதும் வரும். அவை கலைஞனை செதுக்கும். ஆனால், ஒரு படைப்பை முழுமையாகப் பார்த்த பிறகு அதன் பின்னணியைப் புரிந்து கொண்டால் அந்த இசையின் நோக்கம் புரியும்.
சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன்.
ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.
“இப்படத்திற்கு நான் ஏன் தேவை?” என அதன் இயக்குநரிடம் கேட்டேன். “நீங்கள் மட்டும்தான் இப்படத்திற்கு தேவை” என பதிலளித்தார்.
இப்போது சிலர் "90ஸ் காலத்தில் ரோஜா மாதிரி நல்ல இசை கொடுத்தீர்கள்" என்று சொல்கிறார்கள். அதை கேட்கும்போது, இப்பொழுது நான் நல்ல இசையை தரவில்லையா? என்ற எண்ணம் உருவாகிறது. அது மனதளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் 20–30 படங்களுக்கு இசை அமைத்திருக்கேன். இப்போது எனக்காக கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago