2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மீண்டும் பிரேமம் நாயகிகள்

J.A. George   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிரேமம் திரைப்படத்தில் கதாநாயகிகளாக அறிமுகமாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற மூவரில் இருவர் தான் சாய்பல்லவி மற்றும் மடோனா செபாஸ்டியன்.

இந்த இருவரும் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். தெலுங்கில் நானி கதாநாயகனாக நடிக்கும் 'சியாம் சிங்க ராய்' என்கிற திரைப்படத்தில் தான் இவர்கள் கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

அதேபோல மிடில்கிளாஸ் அப்பாயி என்கிற திரைப்படத்தை தொடர்ந்து நானியும் சாய்பல்லவியும் இந்த திரைப்படத்தின் மூலம் இணைகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர கீர்த்தி ஷெட்டி என்கிற இன்னொரு கதாநாயகியும் இதில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X