2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முதல் நாளே பிக் பாஸ் கொடுத்த அதிர்ச்சி !

Editorial   / 2020 ஒக்டோபர் 05 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் 4வது சீசன் நேற்று மிக கோலாகலமான ஆரம்பித்தது. போட்டியாளர்கள் நடனம், பாட்டு என ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டுத் பிக் பாஸ் 4 வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்று இருக்கிறார்கள்.

ரியோ ராஜ், சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சோம் சேகர், கேப்ரியலா, அறந்தாங்கி நிஷா, ராம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆஜித் காலிக் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் 4ல் நுழைந்து இருக்கிறார்கள்.

உள்ளே சென்ற அனைவரும் பிக் பாஸ் வீடு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என ஆச்சர்யப்பட்டு கொண்டிருந்தனர்.

அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பிறகு அவர்கள் அனைவரையும் அழைத்து பிக் பாஸ் இந்த வீட்டின் விதிமுறைகள் பற்றி விரிவாக பேசினார்.

“இரண்டு முறை பிக் பாஸ் அனுபவித்த போட்டியாளர்கள் நீங்களாக தான் இருப்பீர்கள். வெளியில் ஒரு பிக் பாஸ், அதன் பின் இங்கு 100 நாட்கள் பிக் பாஸில் இருக்க போகிறீர்கள். வெளியில் இருந்தது உங்க வீடு, ஆனால் இது என் வீடு. அதற்கென விதிமுறைகள் இருக்கிறது.”

“ஒவ்வொரு வருடமும் புதுப்புது சவால்களை கொடுப்பது தான் இந்த பிக் பாஸ் வீட்டின் தனித்தன்மை. இந்த வருடம் பிக் பாஸ் வீடும் partial லாக் டவுனில் இருக்கும். 

அதாவது பாதி லாக் டவுன். இந்த வீட்டில் ஒரு பெட் ரூம், இரண்டு பர்னர், ஒரு பாத்ரூம், ஒரு டாய்லெட் பூட்டப்பட்டு இருக்கும். அது எப்போது திறக்கப்படும் என்பவுட் காலப்போக்கில் உங்களுக்கு தெரியவரும்” என பிக் பாஸ் அறிவித்து இருகிறார்.

இதை கேட்ட போட்டியாளர்கள் கடும் ஷாக் ஆகிவிட்டார்கள். “மொத்தம் 16 பேர் இருக்கிறோமே. எப்படி இருப்பது?” என பலரும் ஷாக் ஆக கேட்டனர். ஆரம்பித்த உடனேயே இப்படி ஒரு சோதனையா என அவர்கள் அதிகம் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

இது போல இன்னும் பல கட்டுப்பாடுகள் பிக் பாஸ் வீட்டில் வரும் நாட்களில் போடப்படும் என நாம் எதிர்பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X