Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை சாய் பல்லவி, மீ டூ இயக்கத்தால் முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, கூறியுள்ளார். கடந்த, 2018ம் ஆண்டு, மீ டூ இயக்கம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களால் தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டதே, மீ டூ இயக்கம் என, கூறப்பட்டது.
திரைத் துறையினர் முதல், இந்திய மத்திய அமைச்சர் வரை, பல பிரபலங்களும் இதில் சிக்கினர். இந்த நிலையில், அந்த மீ டூ இயக்கத்தால், முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளது, சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாய் பல்லவி கூறுகையில், “ஒரு திரைப்படத்தில் நான் நடித்தபோது, முத்தக் காட்சி வந்தது. அந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது என கூறினேன். எனினும், இயக்குநர் என்னை வற்புறுத்தினார்.
அப்போது என்னுடன் பணியாற்றிய திரைப்படத்தின் கதாநாயகர், எனக்கு ஆதரவாக பேசினார். மீ டூ விவகாரத்தை குறிப்பிட்டு அவர் பேசினார். அதன்பின், அந்த காட்சியில் நடிக்க, இயக்குநர் என்னை வலியுறுத்தவில்லை” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago