Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாரா அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா தயங்குவது கிடையாது.
இவர் கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருந்தார். அந்த படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும்,அம்மன் படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடியும் வரை அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே உண்ண போகிறாராம் நடிகை நயன்.
இந்த நிலையில், நயன்தாரா பதிவிட்ட புகைப்படம் ஒன்று நயன்தாரா விரதம் குறித்து பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.
அங்கே அவர்கள் அசைவ விருந்தில் கலந்து கொண்டு இருக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஸ்டேட்டஸ்ஸாக வைத்திருந்தார். அந்த புகைப்படத்தில் டர்கிஷ் சிக்கன் அளித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், நடிகை நயன்தாரா சிக்கனை வைத்து சில வேடிக்கை காட்டும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதனால் அம்மன் விரதமெல்லாம் சும்மாவா என்று நயனை பலரும் நக்கலடித்து வருகின்றனர்.
Happy Thanksgiving
12 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago