2025 மே 16, வெள்ளிக்கிழமை

முடிவுக்கு வந்தது தெறி வியாபாரம்

George   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய்யின்  தெறி திரைப்படத்தின் வியாபாரம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது. சென்சாருக்கு அனுப்பப்பட்டதில் யு சான்று கிடைத்துள்ளதுடன் ஏப்ரல் 14ஆம் திகதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. 

போட்டிக்கு வேறு எந்தத் திரைப்படங்களும் இல்லாததால் தெறி திரைப்படத்தை வாங்க பலரும் முன்வந்தனர். இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே வினியோக உரிமையை வாங்க அதிர்ஷ்டம் கிடைத்தது. 

ரஜினிகாந்த் திரைப்படங்களின் அளவுக்கு விஜய் திரைப்படங்களுக்கு ஓபனிங் இருக்கும் என்பதாலும், இனி வரப்போவது விடுமுறை நாள் என்பதாலும் நன்றாக வசூலிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழகத்தின் விநியோக உரிமை சுமார் 50 கோடி இந்திய ரூபாய் வரையில் வியாபாரம் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. மற்றபடி வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை, மற்ற மாநில உரிமை ஆகிய அனைத்தும் சேர்ந்தால் அவை 50 கோடி இந்திய ரூபாய் வரை நடந்திருக்கும் என்கிறார்கள். 

மொத்தத்தில் தெறி வியாபாரம் சுமார் 100 கோடி இந்திய ரூபாய் வரை நடந்திருக்க வாய்ப்புண்டு என்றே விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை விஜய் திரைப்படங்களுக்கு என நடந்த வியாபாரத்தை தெறி முறியடித்துள்ளதுடன் வசூலும் முந்தைய திரைப்படங்களின் சாதனையை நிச்சயம் முறியடிக்கும் என்றே சொல்கிறார்கள். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .