2025 மே 16, வெள்ளிக்கிழமை

மீண்டும் அஜீத் - நயன் ஜோடி?

George   / 2016 மார்ச் 28 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீரம், வேதாளம் திரைப்படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் திரைப்படத்தில் நயன்தாராவை ஜோடி சேர்க்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் திரைப்படத்தில், முன்னணி கதாநாயகிகளில் ஒருவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சியும் நடக்கிறது.

நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில் நயன்தாரா நடிக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கிறதாம்.

ஏற்கெனவே அஜீத்துடன் அவர் நடித்த பில்லா, ஆரம்பம் என்ற இரண்டு திரைப்படங்களுமே ஹிட் என்பதால், அந்த செண்டிமென்டுக்காக அவர்களை ஜோடி சேர்க்க முயற்சி நடக்கிறதாம்.

அஜீத் நடிக்கும் திரைப்படத்தை ஜூன் மாதம் முதல் தொடங்குகிறார்கள். அதனால் முக்கிய நடிகர் நடிகைகளிடம்  கோல்சீட் பேச்சுவார்த்தையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .