Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில மாதங்களுக்கு முன்புதான் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிம்பு, அதையடுத்து பூதாகரமாக வெடித்த விமர்சனங்களால் தலைமறைவாகி விட்டார். அந்த பிரச்சினை இன்னும் முடியவில்லை. அதற்குள், நடிகர் சித்தார்த்தும் ஒரு பாடல் விவகாரத்தில் சிக்கி விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
சித்தார்த் தயாரித்து, நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஜில் ஜங் ஜக்... திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல், ஷூட் த குருவி.. ஷூட் த குருவி... என்று தொடங்குகிறது.
அதே பாடலில் பின்னர், ஷூட் த கிளி.. ஷூட் த கிளி.. என்ற வார்த்தையும் இடம்பெறுகின்றது. இந்நிலையில், அந்தப் பாடலை பாடிய பாடகர் அதை ஆபாச வார்த்தை போலவே உச்சரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, இணையதளங்களில் சித்தார்த்தின் இந்த ஷூட் த குருவி... பாடலை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதோடு, சிம்புவின் பீப்... பாடல் வரிசையில் இந்த பாடலையும் இணைத்து விட்டார்கள்.
அவ்வப்போது டுவிட்டரில் ஏதாவது சர்ச்சைக்குரிய விடயங்களை அண்மைக்காலமாக கொளுத்தி போட்டு வரும் சித்தார்த், இந்த புகைச்சலை அணைக்க இன்னும் எந்த பதிலும் கொடுக்கவில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
39 minute ago
1 hours ago