2025 மே 15, வியாழக்கிழமை

மீண்டும் 'மன்மதன், வல்லவன்' கூட்டணி

George   / 2016 ஜூன் 20 , மு.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இது நம்ம ஆளு' திரைப்படத்தை தொடர்ந்து  நடிகர் சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'.

இந்தத் திரைப்படத்தில் மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கின்றார். இந்நிலையில் இந்தத் திரைப்படத்தன் முதற்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதுடன் திரைப்படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைபடத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பதிவின் ஊடாக யுவன் சங்கர் ராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

"அதிகாரபூர்வமாக 'ஏஏஏ' திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிம்பு... இசையமைக்க தயாராகிவிட்டேன்" என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

யுவன் - சிம்பு கூட்டணியில் ஏற்கெனவே வெளியான 'மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம், வானம்' உள்ளிட்ட திரைப்படங்களின் பாடல்கள் ஹிட்டானமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள பாடல்கள் குறித்து அதிக எதிர்பாரப்பு நிலவுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .