Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகை ப்ரியங்கா சோப்ராவை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும் என பிரியங்காவின் முன்னாள் காதலன் ஷாகித் கபூர் கூறியுள்ளார்.
ஒருகாலத்தில் காதலர்களாக ஷாகித் கபூர் - ப்ரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் பொலிவூட்டில் வலம் வந்தார்கள். இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின்னர், சில மாதங்களுக்கு முன்னர் மிரா என்பவரை ஷாகித் திருமணம் செய்து கொண்டார்.
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷாகித்திடம் ப்ரியங்கா பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது, 'சர்வதேச நடிகையாக மாற ப்ரியங்கா சோப்ராவுக்கு எல்லாவிதமான தகுதிகளும் இருக்கிறது, அவரும் சிறப்பாக நடித்து வருகிறார். ப்ரியங்காவை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .