2025 மே 16, வெள்ளிக்கிழமை

யாழ்தேவி இசை வெளியீடு

George   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாண மண்ணில் உருவாகிவரும் முழு நீளத் திரைப்படமான யாழ்தேவியின் இசை வெளியீட்டு விழா யாழ். கிறீன்கிறாஸ் விருந்தினர் விடுதியில் திங்கட்கிழமை (15) மாலை நடைபெற்றது.

இலங்கையைச் சேர்ந்த தென்னிந்திய திரைப்பட நடிகை பூஜா உமாசங்கர் இசைத்தட்டினை வெளியிட்டு வைத்தார். கந்தசாமி லோககாந்தன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை ராஜஸ்ரோன் புரடக்சன் சார்பில் கந்தசாமி இராஜேந்திரகுமார் மற்றும் தசரதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சுமார் 30 இலட்சம் ரூபாய் செலவில் உருவாகிவரும் இந்தத் திரைப்படத்தில் சங்கர், கிரிஸ், நிரோசா, மிதுனா, மதிசுதா, மற்றும் பலர் நடித்துள்ளதுடன் இசையமைப்பாளர் சுதர்சன் இசையமைத்துள்ளார்.

பின்னணி பாடல்களை தென்னிந்திய பிரபல பின்னணி பாடகர்களான சத்தியபிரகாஸ், வந்தனா, ஸ்ரீனிவசன், திவாகர் மற்றும் ஜெசிக்கா ஆகியோருடன் ஈழத்து பாடகர்களான அருள் தர்சன், யூபேஸ், மயூசங்கர், ஜெயபவா, தனுஸ், சிவி, லங்கேஸ், அன்பு, பானுகா, நிசா, சஞ்சீவன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .