2025 மே 15, வியாழக்கிழமை

ரஜினிகாந் நலமாக உள்ளார்

George   / 2016 ஜூன் 16 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜினி நலமாக இருக்கிறார். அவர் இந்த மாதம் இறுதியில் அமெரிக்காவில் இருந்து திரும்பி வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் ரஜினிகாந் உடல்நிலை சரியில்லை என்ற வதந்தி சமூகவலைதளங்களில் பரவலாக பரவி வந்தது. 

கபாலி திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கு அவர் வராமல் இருந்ததற்கு காரணமும் அதுதான் என்று செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

தற்போது ரஜினி அமெரிக்காவில் ஓய்வில் இருக்கிறார் என்றும்  ரஜினி நலமாக இருக்கிறார் என்றும் வெளியான செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .