George / 2016 ஜூலை 05 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனிருத் இசையமைத்துள்ள ரெமோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நீ என் காதலன்...' என்ற பாடல் கொப்பியடிக்கப்பட்ட பாடல் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
யூ-டியூபில் “father vs. daughter beatboxing” என்ற வீடியோவிலிருந்து 'நீ என் காதலன்' பாடல் கொப்பி அடிக்கப்பட்டுள்ளது.
அப்பாவும் மகளும் இணைந்து தங்களுடைய வாயின் மூலம் சத்தத்தை வரவழைத்து இசையமைத்துள்ள அந்தப் பாடல் யூ-டியூபில் மட்டும் 95 இலட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு பாடலை அனிருத் காப்பி அடித்துள்ளார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ரெமோ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நீ என் காதலன்' பாடலை யூ-டியூபிலும் வெளியிட்டுள்ளார்கள். அதில் 'Additional Beat Box sampled from Youtube' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்.
அப்பா, மகள் இருவரும் தங்களது வாயால் இசையமைத்துள்ள பாடலை அனிருத் கொப்பி அடித்தாரா என்பது குறித்து அனிருத்தே அவரது வாயைத் திறந்து சொன்னால்தான் உண்டு.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago