Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
லொஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தால் அவருக்கு நிச்சயம் ஹீரோயினாகவும் வாய்ப்பு உள்ளது என, இயக்குநர் கே. எஸ் ரவிகுமார் கூறியுள்ளார்.
அத்துடன், அவரை திரையுலகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என வெளிப்படையாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சாண்டி, கவின் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் கடந்த வாரம் நொமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கஸ்தூரி குறைந்த வாக்குகளை பெற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் அவர்களுடைய ஆசிரியர்கள் பேசிய ஓடியோ ஒலிபரப்பப்பட்டது.
அப்பொழுது சேரனுக்காக அவரது இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பேசிய ஓடியோ ஒலித்தது. அப்பொழுது சேரன் அவரிடம் உதவியாளராக பணியாற்றியது குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியதுடன் லொஸ்லியா உள்ளிட்ட பிற போட்டியாளர்கள் குறித்தும் பேசினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .