2021 ஜூன் 14, திங்கட்கிழமை

வனிதா மீது பாஜக, காங்கிரஸ் புகார்!

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை வனிதா மீது பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

ஒரு வீடியோவில், நாங்க தஞ்சாவூர். எங்க அப்பாவுக்கு தஞ்சாவூர்தான். அந்தப் பக்கமெல்லாம் ரெண்டு பொண்டாட்டிங்றது ஒரு விஷயமே இல்லை. ஏன் என் அப்பாவுக்கு கூட இரண்டு மனைவிகள்தான் என்றார்.

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் எந்த வீட்டில் பார்த்தாலும் அங்கு இரண்டு திருமணம்தான் பண்ணியிருப்பாங்க. அது தான் அங்க வழக்கம் என்றும் அது தவறு இல்லை என்றும் வனிதா அந்த வீடியோவில் பேசியிருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தஞ்சாவூர் மக்களை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்தும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பாஜக சார்பில் நடிகை வனிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .