2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விஜய்யுடன் மோத தயாராகும் சிம்பு

J.A. George   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாநகரம், கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் மாஸ்டர். 

மாஸ்டர் படத்தை 1000 திரையரங்குகளில் வெளியிடத் திரைத்துறையினர் முயற்சி செய்து வருகிறார்கள். 

மாஸ்டர் ரிலீஸாவதால், பொங்கலுக்கு வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. வெளியாகும் என்று அறிவித்திருந்த அனைத்துப் படங்களுமே பின்வாங்குகிறது. 

இந்த நிலையில், மாஸ்டருக்குப் போட்டியாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்ய விரும்புகிறாராம் சிம்பு. 

தயாரிப்பு தரப்பு விரும்பாத நிலையிலும், பொங்கலுக்கு வந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிம்பு என்று சொல்லப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X