J.A. George / 2020 டிசெம்பர் 18 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் விஷாலின் லுக்கை திரைப்படக்குழு நேற்று(17) வெளியிட்டுள்ளது. கையில் துப்பாக்கியுடன் மாஸான லுக்கில் உள்ளார் புரட்சி தளபதி விஷால்.
இதில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளதுடன், மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்துக்கு கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago