Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாக்கு போடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதாக கமல் கவலை தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கோடிக்கணக்கானோர் வாக்குகளைப் போட்டதுமன்றி, பல கோடி பார்வையாளர்களையும் பிக் பாஸ் – 1 நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியானது, முந்தைய நிகழ்ச்சியை போல் பெரும் வரவேற்பை பெறவில்லை. அத்துடன் இலட்சக்கணக்கானோர் நிகழ்ச்சியை பார்த்த போதிலும் வாக்குகள் போடுவது மிகவும் குறைவாகவே உள்ளது.
வாரம் முழுவதும் வந்த வாக்குகள் மொத்தமாக வெறும் 15 இலட்சம் கூட வரவில்லை. இது முதல் சீசனோடு ஒப்பிடும் போது 10 இல் ஒரு பங்கு கூட வரவில்லை என கமல் தெரிவித்தார்.அதனால் இனி நிகழ்ச்சி பார்க்கும் அனைவரும் “ஓட்டு போடுங்கள்” என வெளிப்படையாகவே கேட்டுவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .