2025 மே 16, வெள்ளிக்கிழமை

வேட்டைக்காரி

Administrator   / 2016 ஜனவரி 11 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் வாய்ப்பு குறைந்து வருவதால் அதனை சரிசெய்ய தெலுங்குத் திரைப்படங்களில் நடிப்பதற்கு முடிவெடுத்துள்ள ஹன்சிகா, அதற்கான வாய்ப்பு தேடும் வேட்டையில் இறங்கியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ரவிதேஜாவுடன் இணைந்து பவர் திரைப்படத்தில் நடித்த  ஹன்சிகா, பிறகு எந்தத் தெலுங்கு திரைப்படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தற்போது தமிழில் திரைப்படங்கள் படிப்படியாக குறைந்து வருவதால், இதை சரிசெய்ய வேண்டும் என்பதற்காக தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்தார் ஹன்சிகா.

ஆனால், தற்போது அவருக்கு அங்கு மார்க்கெட் இல்லாததால் புதிய திரைப்படங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறதாம். இந்த நேரத்தில் தமிழில் அவர் சிம்புவுடன் இணைந்து நடித்த வாலு திரைப்படம் ஷார்ப் என்ற பெயரில் தெலுங்கில் டப்பாகி வருவதால், அந்தத் திரைப்படத்துக்குப் பிறகு புதிய தெலுங்கு திரைப்படங்கள் ஒப்பந்தமாகும் என்று எதிர்பார்க்கிறார் ஹன்சிகா.

அத்துடன், அவரை முன்னிறுத்தியே ஆந்திராவில் ஷார்ப் திரைப்பட விளம்பரம் செய்யப்பட உள்ளதால்;, புதிய உற்சாகத்துடன் தெலுங்கு திரைப்பட வேட்டையை முடுக்கி விட்டிருக்கிறார் ஹன்சிகா.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .