George / 2016 பெப்ரவரி 09 , மு.ப. 04:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயக்குநர் மகேஷ் பட், வங்க மொழித் திரைப்படமான ராஜ்கஹினியை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது ஏற்கெனவே வெளிவந்த செய்தி என்றாலும் அதனை இப்போதுதான் மகேஷ் பட் உறுதிசெய்துள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில், இந்தத் திரைப்படத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. வித்யா பாலன் நடிக்கிறார்.
இந்தத் திரைப்படத்தில் 8 நடிகைகள் நடிக்கவுள்ளனர். ஆனால் அவர்களில் வித்யாவுக்கு மட்டும் முக்கிய கதாப்பாத்திரம் வழங்கியுள்ளேன்.
ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல் ஆகியோர் அவர்களின் தற்போதைய திரைப்படங்களில் பிஸியாக உள்ளனர். எனது மகள் ஆலியா பட்டும் ஹைவே திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜ்கஹினி என்றத் திரைப்படம் நடிகையும் இயக்குநருமான ரிதுபர்ணா சென்குப்தாவின் அற்புதமான நடிப்பில் உருவான திரைப்படங்களில் ஒன்று. இந்த கதை மிக விறுவிறுப்பானது. அதன் மைய கருத்து தான் என்னை இப்படத்தை ரீமேக் செய்ய தூண்டியது' என்றும் மகேஷ் பட் கூறியுள்ளார்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago