George / 2016 மார்ச் 27 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்தி-தமன்னா இருவரும் இணைந்து நடித்த பையா, சிறுத்தை ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சூப்பர் ஹிட்டாகியதுடன் ஜோடி பொருத்தம் அருமையாக இருந்தது.
அத்துடன், பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் அதிக தாராளம் காட்டி நடித்திருந்தார் தமன்னா. குறிப்பாக, பையா திரைப்படத்தில் அவர்கள் நடனமாடிய அடடா மழைடா அடமழைடா -என்ற பாடல் இப்போது வரை இளவட்ட இரசிகர்களின் விருப்ப பாடலாக இருந்து வருகிறது.
அதையடுத்து, கார்த்தி-தமன்னா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக எந்தத் திரைப்படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நாகார்ஜூனா-கார்த்தி நடித்துள்ள தோழா திரைப்படம் மூலம் மீண்டும் கார்த்தியுடன் இணைந்துள்ளார் தமன்னா.
முதல் இரண்டு திரைப்படங்களையும் போலவே இந்தத் திரைப்படமும் இப்போது வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளில் மட்டும் 2.32 கோடி வசூலித்துள்ளது தோழா. இதன்மூலம் மூன்றாவது முறையாகவும் தாங்கள் வெற்றிக்கூட்டணி என்பதை கார்த்தியும், தமன்னாவும் நிரூபித்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago