2025 மே 16, வெள்ளிக்கிழமை

விஷால் ஜோடியாக சம்மதமா இல்லையா?

Administrator   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள துப்பறிவாளன் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகின்றது. 

மருது திரைப்படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் நாயகனாக நடித்து விஷால் தயாரிக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், ராகுல் பரித்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்ட போதிலும் தமிழில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் ராகுல் ப்ரீத்தி சிங், இந்த வாய்ப்பை நழுவ விடமாட்டார் என தெரிகிறது.

தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்றத் திரைப்படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்து விட்டார். அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சரைனொடு திரைப்படத்தில் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், ராம் சரண் நடிக்கும் தனி ஒருவன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .