George / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஸ்ரேயா,ராஜபாட்டை திரைப்படத்தில் விக்ரமுடன் ஐயிட்டம் பாடலில் நடனமாடியதோடு காணமல் போனவர், தற்போது பாகுபலி 2 வில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றார்.
கன்னடத்தில் அவர் நடித்து கடந்த வருடம் வெளியான சந்திரா தோல்விவயடைந்தது. எனினும், தெலுங்கில் அவர் நடித்த மனம் வெற்றி பெற்றதால் தெலுங்கில் சிலத் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . அத்துடன் மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்து வெளியான த்ருஷ்யம் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய்தேவ்கானுக்கு ஜோடியாக நடித்தார்.
பாகுபலியில் தமன்னா நடித்தது போன்று ஸ்ரேயாவுக்கும் இந்த பகுதியில் இதுவரை நடிக்காத வேடம் கிடைத்திருப்பதால் அந்த வேடத்துக்காக முழுமையாக தன்னை தயார்படுத்திக்கொண்டு வருகிறாராம்.
இதுவரை தான் வழக்கமான கதாநாயகியாகவே நடித்திருந்தபோதும், இனி நடிக்கும் திரைப்படங்களில் அனுஷ்கா நடிப்பது போன்று கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறாராம்.
அதனால், தான் சந்திக்கும் இயக்குநர்களிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி, சினிமாவில் 14 ஆண்டுகளாக நடித்து வந்தபோதும், பெரிதாக சாதிக்கவில்லை. அதனால், நானும் அனுஷ்கா நடிப்பது போன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க சரியான கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு வருகின்றாராம்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025