Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
George / 2016 மே 23 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜி.வி.பிரகாஷை வைத்து தான் இயக்கயிருக்கும் கிக் என்னும் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்துக்கு அவிகா கபூர் என்ற நடிகையை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருந்த இயக்குநர் ராஜேஷ், ஜி.வி.பிரகாஷ்-கயல் ஆனந்தியின் ரொமான்ஸ் பற்றி கேள்விப்பட்டு, உடனடியாக அவிகா கபூரை ஓரங்கட்டிவிட்டு ஆனந்தியை ஓகே பண்ணி விட்டாராம்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த திரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி, மனீஷா யாதவ் இருவரும் நடித்திருந்தனர்.
திரைப்படம் வெளியானபோது திரையரங்குகளுக்கு பெண்கள் வர தயங்கியபோதும், இளவட்ட ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வெற்றி பெறச்செய்தனர். அந்த வெற்றி செண்டிமென்ட் காரணமாக அதன்பிறகு ஜி.வி.பிரகாஷ் நடித்த எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்றத் திரைப்படத்திலும் கயல் ஆனந்தி ஒப்பந்தமானார்.
முந்தைய இரண்டு திரைப்படங்களிலும் நடிகைகளை நெருங்கி நடிக்க சற்று தயங்கி விலகி விலகி நின்றபடி நடித்த ஜி.வி.பிரகாஷ், ஆனந்தியுடன் ஏற்கெனவே நடித்திருப்பதால் அந்த நட்பு அடிப்படையில் அதிக நெருக்கம் காட்டி ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறாராம். ஆனந்தியும் அவருக்கு ஈடுகொடுத்து இளவட்ட ரசிர்களின் மனதை தொடும் வகையில் சின்னச்சின்ன ரொமான்ஸ் வெளிப்பாடுகளைகூட கிக்காக கொடுத்திருக்கிறாராம்.
இந்நிலையில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்- ஆனந்திக்கு அதிகபடியான ரொமான் காட்சிகளை இயக்குநர் ராஜேஷ் உருவாக்கியுள்ளாராம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
8 hours ago