2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... கொரோனா தொற்றால் மற்றுமொரு தமிழ் நடிகர் உயிரிழப்பு

J.A. George   / 2021 ஜூன் 17 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்நிலையில் இந்நிலையில் ‘தொரட்டி’ படத்தில் நடித்த ஷமன் மித்ரு இன்று (ஜூன் 17) கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 43.

2019ஆம் ஆண்டு வெளியான படம் ‘தொரட்டி’. பி.மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வேத் சங்கர் இசையமைத்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்பு ஷமன் மித்ருவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷமன் மித்ரு மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .