2021 ஜூலை 28, புதன்கிழமை

நிறைவேறாமல் போன விவேக்கின் ஆசை

Editorial   / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாயகன் கமல் ஹாசனுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விவேக். இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அவரின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.

அஜித், விஜய், மாதவன், ரஜினிகாந்த் என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் விவேக். பல இளம் ஹீரோக்களுக்கு கூட நண்பராக நடித்து நம்மை எல்லாம் சிரிகக் வைத்திருக்கிறார். ஆனால் அவர் கமல் ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடித்ததே இல்லை. கமலுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விவேக். இந்நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன், என் நீண்ட கால ஆசை நிறைவேறப் போகிறது என்று சந்தோஷமாக ட்வீட் செய்தார் விவேக். ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.

இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு இறந்துவிட்டார் விவேக். இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை மீண்டும் ஆரம்பிக்கப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .