2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

அஜித்தின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொன்ன விஜய்

J.A. George   / 2023 மார்ச் 24 , பி.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்தின் வீட்டிற்கே நேரடியாக சென்று விஜய் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித்தின் தந்தை இன்று(24) காலை காலமானார். அவருக்கு பல திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரிலும் தொலைபேசியிலும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, உலகநாயகன் கமல்ஹாசன், பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்பட பல திரையுலக, அரசியல் பிரபலங்கள் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
அந்த வகையில் அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விஜய், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .