2021 ஒக்டோபர் 23, சனிக்கிழமை

நகைச்சுவை நடிகரின் வீடு புகுந்து ரவுடிகள் தாக்குதல்

J.A. George   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் புகுந்து அவர் மீது கொலை வெறி தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன்.

அண்மையில், நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்ட சர்ச்சையானது.

இது குறித்து பலரும் விமர்சித்த நிலையில் நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவி என்ற பெண்ணுடன் சேர்ந்து கருத்து தெரிவித்தார்.

பின்னர் வனிதா, சூரியாதேவி மீது புகார் கொடுத்தார். இது பரபரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, மன்னிப்புக் கேட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார்.

இதை நாஞ்சில் விஜயன் மறுத்தார். தான் மன்னிப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்த சூழலில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ரவுடிகள் புகுந்து அவரை தாக்கியுள்ளனர். அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ரவுடிகளோடு வீட்டிற்குள் புகுந்து கொலை செய்ய முயன்றதாக கூறியுள்ளார்.

மேலும் வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் காயம் இருக்கிறது. அவர் கை வலிப்பதாக அழுது கொண்டே மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறுவது போல வீடியோவில் உள்ளது, மேலும் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கும் புகைப்படத்தையும் விஜயன் வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .