2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

படப்பிடிப்புக்கு பறந்த சிம்பு

J.A. George   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக மும்பை செல்வதாக சிம்பு விமானத்தில் செல்லும்போது எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

மும்பையில் சில நாட்கள் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னை வர உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலானது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X