2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இரட்டைக் குழந்தைகளுக்குத் தந்தையானார் பிரபல இயக்குனர்

Ilango Bharathy   / 2021 ஜூலை 15 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாளத்தில் கடந்த 2009ஆம்  ஆண்டு வெளியான ‘இவ விவஹிதரயால்’ என்ற திரைப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சஜி சுரேந்திரன்.

 இதையடுத்து ஹாப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இவர்  கடந்த 2005ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், இத் தம்பதிக்குத் தற்போது இரட்டைக் குழந்தைகள்  பிறந்துள்ளன. இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி வெளியிட்டுள்ள பதிவில், “சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும்.  கடவுளுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தைகள்  பிறந்துள்ளதால், இத்தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X