2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ராதாவின் முத்தத்தில் நெகிழ்ந்த பாரதிராஜா

Editorial   / 2021 ஜூலை 21 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

1980 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர்  நடிகை ராதா. பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் ராதா. முதல் மரியாதை படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தார் ராதா.

இந்தப் பெரும் வரவேற்பை பெற்றது. இன்று வரையும் பலரின் ஃபேவரைட்டாக உள்ளது இப்படம். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் ராதா.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் நடித்தார் நடிகை ராதா. தற்போதும் ஆக்டிவாக உள்ள ராதா சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த 17ஆம் இயக்குநர் பாரதிராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகை ராதா. அப்போது அவருடன் எடுத்த போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ராதா.

மேலும் பாரதிராஜாவை சந்திப்பது எப்போதும் என் தந்தையை சந்திப்பது போன்றது. எனது சினிமா பயணம் அனைத்திற்கும் நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். 

அவரது பிறந்தநாளில் அவருடன் நேரம் செலவழிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். கடவுள் நம் வாழ்வில் இன்னும் பல ஆரோக்கியமான ஆண்டுகளை அவருக்கு பரிசளிப்பார் என பதிவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .