J.A. George / 2021 மார்ச் 30 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தளபதி விஜய் நடிப்பில் அனிருத் இசையில் உருவான ’மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற ’வாத்தி கம்மிங்’பாடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் செம ஆட்டம் போட்ட வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறன.
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யுடன் நடித்த நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1998ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கிய ’காதல் கவிதை’என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர்.
அதன்பின்னர் இவர் அரவிந்தசாமியுடன் ‘என் சுவாச காற்றே விஜய்யுடன் ’நெஞ்சினிலே’பிரசாந்துடன் ’ஜோடி’விஜயகாந்த் உடன் ’நரசிம்மா’போன்ற திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் நடிகை இஷா கோபிகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு செம நடனம் ஆடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026