J.A. George / 2021 மார்ச் 23 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், டி இமான் இசையமைப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில மாதங்களாக நிறுத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போது படப்பிடிப்பு குழுவினர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பின்னர் ரஜினிகாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதுடன், அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் மீதி உள்ள படப்பிடிப்பை விரைவில் முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
அந்த வகையில் தற்போது சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருவதாகவும் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவின் காட்சிகள் இன்னும் ஓரிரு நாள் நடைபெறும் என்றும் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
4 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
03 Nov 2025