2021 ஜூலை 28, புதன்கிழமை

டுவின்ஸ் பிறந்த நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி!

J.A. George   / 2021 மார்ச் 30 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒன்று பிரஜின் மற்றும் சாண்ட்ரா. நடிகை சாண்ட்ரா தொலைக்காட்சிகளில் பல  சீரியல்களில் நடித்தவர்.’சின்னத்தம்பி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த பிரஜின் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

10 ஆண்டுகள் கழித்து கடந்த 2019ஆம் ஆண்டு கர்ப்பமான சாண்ட்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா மற்றும் ருத்ரா என்று பிரஜின் – சாண்ட்ரா தம்பதிகள் பெயர் வைத்தனர்

இந்த நிலையில் பிரஜின்-சான்ட்ராவின் குழந்தைகளின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் அண்மையில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது .

இது குறித்து பிரஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இதை விட வாழ்கையில் வேற என்ன வேணும்? எனது இளவரசிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர். எப்பொழுதுமே பெண் குழந்தைகள் என்றால் அப்பாவின் செல்லம் தான். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!” என்று பதிவு செய்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .