2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

மீண்டும் விஜய்-த்ரிஷா

Freelancer   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் த்ரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர்கள் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், மிஷ்கின், கௌதம் மேனன், நடிகை பிரியா ஆனந்த், சாண்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதற்குமுன்பு த்ரிஷா, விஜய் ஜோடியாக கில்லி, குருவி, ஆதி, திருப்பாச்சி உள்ளிட்ட படத்தில் நடித்திருந்தார். 14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புகாக படக்குழு அனைவரும் தனி விமானத்தில் காஷ்மீருக்கு சென்று வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் விஜய் - த்ரிஷா விமானத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. விமானத்தில் பணிப்பெண்ணுடன் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .