2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

தமிழில் கதாநாயகியாகக் களமிறங்கும் சன்னி லியோன்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ் பெற்ற கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான நடிகை சன்னிலியோன் கதாநாயகியாக நடித்திருக்கும் `ஷெரோ` என்ற தமிழ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.

 தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை  ஸ்ரீஜித் விஜயன் இயக்குகின்றார்.

முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைப்பில் ஒளிப்பதிவாளர் மனோஜ் குமார் கடோய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சன்னிலியோன் தமிழில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்த `வடகறி` திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .