2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

சூப்பர் சிங்கரில் இருந்து ப்ரியங்கா விலகல்?

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பொஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக பங்கேற்க இருப்பதாகவும் இதனால் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகி உள்ளதாகவும், அவருக்கு பதிலாக இந்நிகழ்ச்சியை ஷிவாங்கி தொகுத்து வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷிவாங்கியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ”இரண்டு வருடங்களுக்கு முன் போட்டியாளர்களாக இருந்த நான் இன்று அதே போல் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக மாறியுள்ளேன்” என்று கூறியதிலிருந்து ஷிவாங்கி தொகுப்பாளினியாக மாறி உள்ளார் என்பதும் பிரியங்கா பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .