Freelancer / 2022 மே 14 , பி.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் காஞ்சனா 3ஆம் பாகத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நிக்கி டம்போலி தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர் தன்னை மோசமாக நடத்தியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வெளியான இருட்டறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து அங்கும் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்திருக்கிறார் நிக்கி டம்போலி.
தற்போது மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வந்திருக்கும் நிக்கி டம்போலி சமீபத்தில் கொடுத்த பேட்டியில் அவருக்கு நடந்த சம்பவத்தி குறித்து பேசியிருக்கிறார்.
“தென்னிந்திய சினிமாவைச் சேர்ந்த ஒரு இயக்குநர் என்னை மோசமாக நடத்தினார். உடல் ரீதியாக இல்லாமல் வெளிநாட்டில் நான் நடனம் ஆடச்சென்றபோது என்னை அவமதித்து மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதால் நான் அழுதே விட்டேன். அவர் யார் என்பதை சொல்ல மாட்டேன். இப்போதும் அவருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள், யார் அந்த இயக்குநர் என்று ஒவ்வொரு பெயராக இணையத்தில் கேட்டு வருகிறார்கள்.
9 minute ago
40 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
40 minute ago
51 minute ago