2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

ஹொலிவுட்டுக்கு செல்லும் வில்லன்

J.A. George   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ்.

தற்போது இவர் கைவசம் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’உள்ளிட்ட பல திரைப்படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் பிரகாஷ் ராஜ், விரைவில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். அண்மைய பேட்டி மூலம் அவர் இதனை உறுதி செய்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ் திரையுலகை சேர்ந்த தனுஷ், நெப்போலியன், ஜிவி பிரகாஷ் ஆகியோர் ஹொலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X