2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

பிரபாஸுடன் திருமணம்

J.A. George   / 2022 நவம்பர் 29 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ளார். தனது ஒவ்வொரு பேட்டியிலும் இந்த படம் குறித்து பேசும்போதெல்லாம் பிரபாஸ் மீதான தனது நெருக்கத்தை வெளிப்படையாகவே கூறி வருகிறார் கிர்த்தி சனோன்.

அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் பிரபாஸை தான் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்னும் ஒரு பேட்டியில், “ஆதிபுருஷ் படப்பிடிப்பின்போது பிரபாஸ் எனக்கு தெலுங்கு டீச்சராக இருந்து தெலுங்கு கற்றுக் கொடுத்தார்.. அவருக்கு நான் ஹிந்தி கற்றுக் கொடுத்தேன்” என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்ல ஹிந்தியில் கிர்த்தி சனோனுடன் இணைந்து நடித்துள்ள வருண் தவான் ஒரு பேட்டியில் கூறும்போது, கிர்த்தி சனோன் வாழ்க்கையில் அண்மைகாலமாக ஒரு உயரமான இளவரசன் நுழைந்துள்ளார் என கூறியுள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது பிரபாஸ் குறித்து கிர்த்தி சனோன் சீரியசாக தான் பேசி வருகிறாரோ என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .