2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

விக்கி - நயன் எடுத்த அதிரடி முடிவு

Freelancer   / 2022 மே 28 , பி.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். 

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று இரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், இரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9ஆம் திகதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், தற்போது திருமண இடத்தை மாற்றி வைத்துள்ளனர்.

150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும், மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் ஜூன் 9ஆம் திகதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .