2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

கொள்ளையனின் கதையா ’ஜப்பான்’?

J.A. George   / 2023 ஜூன் 06 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நகைக்கடை கொள்ளையன் உண்மை கதைதான் கார்த்தி நடித்து வரும் ’ஜப்பான்’ படத்தின் கதை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்தி நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் கசிந்து உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவாரூர் முருகன் என்ற நகைக்கடை கொள்ளையன் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லலிதா ஜுவல்லரி கடையில் ஏற்பட்ட நகை திருட்டுக்கு திருவாரூர் முருகன் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.

இந்த நிலையில், திருவாரூர் முருகன் நகைக்கடை கொள்ளையை தழுவி தான் ’ஜப்பான்’ படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமான நிகழ்வை மட்டும் இயக்குனர் மாற்றியதாகவும் தெரிகிறது.

ஆனால் கார்த்தி அதனை மாற்ற வேண்டாம் என்றும் உண்மை கதையில் இருந்தபடி ’ஜப்பான்’ படத்தின் கதையில் இருக்கட்டும் என வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வரும் இந்த படத்தில் விஜய் மில்டன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .