Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடிக்க வைப்பதாகக் கூறி நடிகையை ஆபாச படங்கள் எடுத்தமை மற்றும் அதனை செயலியில் வெளியிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் பிரபல பொலிவூட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ராவை கடந்த 19 ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் மேலும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது ஆலோசகர் ரயான் தர்பே இருவரும் தங்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கை இரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
குறித்த விசாரணையில் அவர்களின் சில வட்ஸ்அப் தகவல்கள் நீக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அதில் சிலவற்றை மட்டுமே மீட்க முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜ் குந்த்ரா அலுவலகத்தில் இருந்து அவரது மடிக்கணினியை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 68 ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
எனினும் இதனை மறுத்த ராஜ் குந்த்ராவின் சட்டத்தரணி ”அவை பாலுணர்வை தூண்டும் ஆபாச படங்கள் அல்ல, அவை பாலுணர்வை சொல்லும் கலையம்சம் கொண்டவை என்றும், எனவே ஆபாசப் படம் எடுத்திருப்பதாக அவரை கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும்வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட உயர் நீதிமன்றம் , ராஜ் குந்த்ராவின் மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது.
55 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago