2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

த்ரிஷாவின் அசத்தல் அப்டேட்

J.A. George   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இத்திரைப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது.

விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இத்திரைப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இந்தநிலையில், “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “மங்காத்தா, மன்மதம் அம்பு” உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடிகை திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்காக சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார் த்ரிஷா.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X