2022 மே 20, வெள்ளிக்கிழமை

இப்பதான் வெளியே வந்தாங்க.. அதுக்குள்ள இப்படி ஒரு சோதனையா?

J.A. George   / 2022 ஜனவரி 20 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. ‌‌

போட்டியின் டைட்டில் வின்னர் ஆக ராஜு வெற்றிபெற இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்தார். மேலும் பாவனிக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து ஒரு வாரம் மட்டுமே ஆன நிலையில் பாவனிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் வேறு யாருக்காவது கொரானா பாதிப்பு இருக்குமோ என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ‌‌


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .