2023 ஜூன் 10, சனிக்கிழமை

சம்பவமே தனுஷ் வீட்டில் தான்

Freelancer   / 2023 மார்ச் 30 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் ரஜினிகாந்தின் மூத்தமகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வேலைபார்த்த பெண் ஈஸ்வரியிடம் , தொடர் விசாரணைக்கு பின் மேலும் 43 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், ரஜினிகாந்த் வீட்டில் வேலைக்காரப்பெண் ஈஸ்வரி கைவரிசை காட்டவில்லை என்றும், நடிகர் தனுசின் செயின்ட் மேரீஸ் சாலை அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் வைத்துதான் நகைப்பெட்டி லாக்கரில் இருந்து நகைகள் திருடப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது என தெரிவித்தனர்.

இதனிடையே பொலிஸ் காவலில் இருந்த ஈஸ்வரி, வெங்கடேசன் ஆகியோர் நேற்று மீண்டும் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .