2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

’மங்காத்தா 2’ உருவாகிறதா?

J.A. George   / 2022 நவம்பர் 22 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜீத் மற்றும் அர்ஜுன் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ’மங்காத்தா’படத்தின் இரண்டாம் பாகத்தை வெங்கட் பிரபு இயக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைக்கு பதிலளித்த வெங்கட்பிரபு, ’மங்காத்தா 2’ படத்தின் கதை தயாராக இருக்கிறது என்றும் அஜித் எப்போது ஓகே சொன்னாலும் அந்த படத்தை ஆரம்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ’மங்காத்தா’ படத்தில் இரண்டு முக்கிய கேரக்டர்களில் நடித்து இருந்த அஜீத் மட்டும் அர்ஜுன் ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து விரைவில் ’மங்காத்தா’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X