2023 மார்ச் 30, வியாழக்கிழமை

’கேப்டன் மில்லர்’ தனுஷ்

J.A. George   / 2023 ஜனவரி 24 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ஒரு நிமிடத்திற்கும் மேலாக இருக்கும் இந்த வீடியோவில் படப்பிடிப்பிற்காக பிரமாண்டமாக செட் போடும் காட்சிகள் உள்ளன. மேலும் வீடியோவின் இறுதியில் கையில் துப்பாக்கி உடன் தனுஷ் ஆவேசமாக இருக்கும் காட்சி உள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .