2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

‘தளபதி 66’ அறிவிப்பு வெளியானது

Freelancer   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய்யின் 66ஆவது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கெனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கியுள்ளார். 

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ள ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.  

அஜித்தின் வலிமை குறித்த அறிவிப்புகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டதைப்போல் தற்போது விஜய்யின் ‘தளபதி 66’ அறிவிப்பும் அவ்வாறே வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும்  விஜய்யின் 65ஆவது படமான ‘பீஸ்ட்’இல்  ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .